தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும்.[1] ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.
ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.
மணித்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலே விளக்கப்பட்ட அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர்.
நன்கு பழுத்த பழத்தில் இருந்து உட்கனியம் வித்துக்களுடன் வேறாக்கப்படும். இது இரு நாள் வரை நொதிக்கவிடப்படும். மறு வித்திக்களை சுற்றியுள்ள சளிப்படை நிங்கும் வகையில் நன்கு வித்துக்கல் கழுவப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஏரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும்.பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.
தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.