ஊனுண்ணி என்பது சுமார் 280க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களை உள்ளடக்கிய ஒரு வரிசை ஆகும். இவ்வரிசை உயிரினங்கள் ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஊனுண்ணி (பொதுவாக இக்குழுவில் உள்ள உறுப்பினர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தை) என்ற வார்த்தையானது ஊன் உண்ணும் எந்த உயிரினத்தையும் அழைக்கப் பயன்படுத்தபடுகிறது. பாலூட்டி வரிசையிலேயே அளவில் இந்த வரிசைதான் வேறுபாடு அதிகம் உடையது. சிறிய மரநாயில் (Mustela nivalis, எடை 25 கிராம், அளவு 11 செ.மீ. ) இருந்து பனிக்கரடி (Ursus maritimus, எடை 1 டன்) வரையிலும், தெற்கு கடல் யானை (Mirounga leonina, எடை 5 டன், நீளம் 6.9 மீ) வரையிலும் அளவுள்ள உயிரினங்கள் காணப்படுகின்றன.