dcsimg
Image of <i>Minibiotus formosus</i> Zawierucha, Dziamięcki, Jakubowska, Michalczyk & Kaczmarek 2014
Creatures » » Animal »

Water Bears

Tardigrada

நீர்க் கரடி ( Tamil )

provided by wikipedia emerging languages

SEM image of Milnesium tardigradum in active state - journal.pone.0045682.g001-2.png

மெதுநடையன் (Tardigrade)[2] அல்லது பாசி பன்றிக்குட்டி என்பது ஒரு நுண் விலங்குகள் இனத்தைச் சார்ந்த நீரில் வாழும் விலங்கு ஆகும். இதை வெறுங்கண்ணால் பார்க்க இயலாது நுண்நோக்கி உதவியுடன்தான் இதைப் பார்க்க முடியும். இவை அரை மில்லி மீட்டர் அளவுவரை இருக்கும், விதி விலக்காகச் சில நீர்க்கரடிகள் ஒன்றரை மில்லி மீட்டர் வரை வளரும். இவ்வினத்தை ஜெர்மனி விலங்கியல் நிபுணர் ஜோஹன் ஆகஸ்ட் எப்பிராயீம் சீயோசி என்பவரால் 1773 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவை உறைந்து போன குளிரிலும் இனப்பருக்கம் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளது.[3]

இவற்றுக்கு 8 கால்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கால்களிலும் நான்கு முதல் எட்டு நகங்கள் வரை இருக்கும். இந்தக் கால்களைக் கொண்டு இது நடந்து வரும் காட்சி கரடி நடப்பது போலவே இருக்கும். இதனால் இவை இப்பெயர் பெற்றன. பாசிகள் மீதும், சிறு சிறு நுண்ணுயிரிகள் மீதும் தன் உடம்பில் இருந்து சுரக்கும் திரவத்தைப் பரப்பி அதனை உணவாக்கிக் கொள்கிறன. உணவும் தண்ணீரும் இல்லாமல் 30 ஆண்டுகள் வரை இவற்றால் உயிர்வாழ முடியும். நீர்ச்சத்து ஒரு சதவீதத்திற்குக் கீழ் குறையும்போதுதான் இவை மரணமடைகின்றன.

இந்த உயிரி 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் வாழ்கிறது. மேலும் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வாழக்கூடியதாக இது உள்ளது. மனிதர்கள் பத்து அலகு அணுக் கதிரிவீச்சலேயே மரணம் அடைவார்கள். ஆனால், இது 5,000 அலகு கதிரியக்கத்தையும் தாங்கக்கூடியதாக உள்ளது. இவை வெயில், மழை, பனி, புயல், தகிக்கும் எரிமலைகள், பனிபடர்ந்த மலைகள், ஆழ்கடல்கள், காற்றே இல்லா வான்வெளி என எல்லா இடங்களிலும் வாழும் தகவமைப்பை பெற்று, உலகம் முழுவதும் இந்த நீர்க்கரடிகள் காணப்படுகின்றன. இமயமலையில் 6,000 மீட்டர் உயரத்தில் பனி உறைந்த பிரதேசத்திலும், ஆழ்கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன. ஆராய்ச்சிக்காகச் சில நீர்க்கரடிகள் வான் வெளியில் ஆய்வாளர்கள் வைத்து, பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு எடுத்து வந்தபோது ஒரு நீர்க்கரடி கூட சாகவில்லை. இதனால் இதற்கு ‘வான் கரடி’ என்ற பெயரும் வந்தது.[4]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Budd, G.E. (2001). "Tardigrades as 'stem-group arthropods': the evidence from the Cambrian fauna". Zool. Anz 240 (3–4): 265–279. doi:10.1078/0044-5231-00034.
  2. https://ta.wiktionary.org/wiki/tardigrade
  3. குளிரில் ஓர் ஆச்சரியம் தி இந்து தமிழ் 26 நவம்பர் 2016
  4. ஆதலையூர் சூரியகுமார் (2017 சூன் 7). "இந்த நீர் கரடியைத் தெரியுமா?". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 சூன் 2017.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நீர்க் கரடி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
SEM image of Milnesium tardigradum in active state - journal.pone.0045682.g001-2.png

மெதுநடையன் (Tardigrade) அல்லது பாசி பன்றிக்குட்டி என்பது ஒரு நுண் விலங்குகள் இனத்தைச் சார்ந்த நீரில் வாழும் விலங்கு ஆகும். இதை வெறுங்கண்ணால் பார்க்க இயலாது நுண்நோக்கி உதவியுடன்தான் இதைப் பார்க்க முடியும். இவை அரை மில்லி மீட்டர் அளவுவரை இருக்கும், விதி விலக்காகச் சில நீர்க்கரடிகள் ஒன்றரை மில்லி மீட்டர் வரை வளரும். இவ்வினத்தை ஜெர்மனி விலங்கியல் நிபுணர் ஜோஹன் ஆகஸ்ட் எப்பிராயீம் சீயோசி என்பவரால் 1773 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவை உறைந்து போன குளிரிலும் இனப்பருக்கம் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளது.

இவற்றுக்கு 8 கால்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கால்களிலும் நான்கு முதல் எட்டு நகங்கள் வரை இருக்கும். இந்தக் கால்களைக் கொண்டு இது நடந்து வரும் காட்சி கரடி நடப்பது போலவே இருக்கும். இதனால் இவை இப்பெயர் பெற்றன. பாசிகள் மீதும், சிறு சிறு நுண்ணுயிரிகள் மீதும் தன் உடம்பில் இருந்து சுரக்கும் திரவத்தைப் பரப்பி அதனை உணவாக்கிக் கொள்கிறன. உணவும் தண்ணீரும் இல்லாமல் 30 ஆண்டுகள் வரை இவற்றால் உயிர்வாழ முடியும். நீர்ச்சத்து ஒரு சதவீதத்திற்குக் கீழ் குறையும்போதுதான் இவை மரணமடைகின்றன.

இந்த உயிரி 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் வாழ்கிறது. மேலும் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வாழக்கூடியதாக இது உள்ளது. மனிதர்கள் பத்து அலகு அணுக் கதிரிவீச்சலேயே மரணம் அடைவார்கள். ஆனால், இது 5,000 அலகு கதிரியக்கத்தையும் தாங்கக்கூடியதாக உள்ளது. இவை வெயில், மழை, பனி, புயல், தகிக்கும் எரிமலைகள், பனிபடர்ந்த மலைகள், ஆழ்கடல்கள், காற்றே இல்லா வான்வெளி என எல்லா இடங்களிலும் வாழும் தகவமைப்பை பெற்று, உலகம் முழுவதும் இந்த நீர்க்கரடிகள் காணப்படுகின்றன. இமயமலையில் 6,000 மீட்டர் உயரத்தில் பனி உறைந்த பிரதேசத்திலும், ஆழ்கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன. ஆராய்ச்சிக்காகச் சில நீர்க்கரடிகள் வான் வெளியில் ஆய்வாளர்கள் வைத்து, பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு எடுத்து வந்தபோது ஒரு நீர்க்கரடி கூட சாகவில்லை. இதனால் இதற்கு ‘வான் கரடி’ என்ற பெயரும் வந்தது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்