dcsimg

துறவி நண்டு ( Tamil )

provided by wikipedia emerging languages

துறவி நண்டு (Hermit crab) என்பது பத்துக்காலி வரிசையைச் சேர்ந்த மெல்லுடலி ஆகும். இதில் தோராயமாக மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கூட்டினைச் சுமந்து கொண்டு இவை தனியாக வாழ்வதால் துறவி நண்டு எனும் பெயர் பெற்றதாய்க் கருதப்படுகிறது.[1] இந் நண்டுகள் வளர வளர தங்கள் கூட்டினையும் மாற்றிக் கொள்ளும். சில வேளைகளில் பல நண்டுகள் ஒன்றாகக் குழுமியிருந்து ஒரு நண்டு கழற்றிய கூட்டை மற்றொரு சிறிய நண்டு எனும் முறையில் வரிசையாக மாற்றிக் கொள்ளும்.[2][3] இந்தக் கூட்டினைப் பெற இவற்றிடையே பெரும் சண்டை நடப்பதும் உண்டு.[3] ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும்.[3][4]

உடலமைப்பு

 src=
Outside its shell, the soft, curved abdomen of hermit crabs such as Pagurus bernhardus is vulnerable.

துறவி நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது.இந்த நண்டுகள் நத்தைகள் விட்டுச் சென்ற சங்குக் கூடுகளைத் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.[5][6] நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.[7] இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான கண்கள் இருக்கும்.

வாழ்வியல்

Underwater photo of a hermit crab and gastropod shell
Hermit crabs fighting over a shell
 src=
A hermit crab retracted into a shell of Acanthina punctulata and using its claws to block the entrance

கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும்.[8][9] கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன.[4] அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.[2][3] நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன. பொதுவாகத் துறவிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.

ஒன்றிய வாழ்வு

சில வேளைகளில் இத்துறவி நண்டுகள் கடற் சாமந்திகளுடன் ஒன்றிய வாழ்வை ஏற்படுத்திக் கொள்கின்றன. சில துறவி நண்டுகள் சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன. கடற் சாமந்திகள் துறவி நண்டின் எதிரிகளைப் பயமுறுத்துகின்றன. துறவி நண்டு உண்ணும் போது உணவுத் துண்டுகளைப் பெற்றுக் கொள்கின்றன.

வளர்ப்பு விலங்குகளாக

துறவி நண்டுகள் வளர்ப்பு விலங்குகளாயும் வளர்க்கப்படுகின்றன. கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.பொதுவாக விற்பனையாளர்கள் இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வாங்கும்படி அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இவை குழுக்களாக நல்ல முறையில் நடந்து கொள்கின்றன.[10][11] சில சிற்றினங்கள் நன்கு கவனித்தால் 32 வருடங்கள் வரை கூட வாழக்கூடியவை.[12][13]

மேற்கோள்கள்

  1. Douglas Harper. "Hermit". Online Etymology Dictionary. பார்த்த நாள் March 26, 2010.
  2. 2.0 2.1 "Social networking helps hermit crabs find homes: previously unknown group behaviors lead to better housing for all". Tufts University. April 26, 2010. http://news.tufts.edu/releases/release.php?id=169.
  3. 3.0 3.1 3.2 3.3 Randi D. Rotjan, Jeffrey R. Chabot & Sara M. Lewis (2010). "Social context of shell acquisition in Coenobita clypeatus hermit crabs". Behavioral Ecology 21 (3): 639–646. doi:10.1093/beheco/arq027.
  4. 4.0 4.1 E. Tricarico & F. Gherardi (2006). "Shell acquisition by hermit crabs: which tactic is more efficient?". Behavioral Ecology and Sociobiology 60 (4): 492–500. doi:10.1007/s00265-006-0191-3.
  5. W. D. Chapple (2002). "Mechanoreceptors innervating soft cuticle in the abdomen of the hermit crab, Pagurus pollicarus". Journal of Comparative Physiology A 188 (10): 753–766. doi:10.1007/s00359-002-0362-2. பப்மெட்:12466951.
  6. Jason D. Williams; John J. McDermott (2004). "Hermit crab biocoenoses: a worldwide review of the biodiversity and natural history of hermit crab associates" (PDF). Journal of Experimental Marine Biology and Ecology 305: 1–128. doi:10.1016/j.jembe.2004.02.020. http://people.hofstra.edu/jason_d_williams/Publications/Williams&McDermott2004%20copy.pdf.
  7. Ray W. Ingle (1997). "Hermit and stone crabs (Paguroidea)". Crayfishes, lobsters, and crabs of Europe: an illustrated guide to common and traded species. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 83–98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-71060-5. http://books.google.co.uk/books?id=x-qVGbTAOiEC&pg=PA83.
  8. Hermit-Crabs.com
  9. Hermitcrabs.org
  10. Christa Wilkin (2004). "Basic crab care". பார்த்த நாள் August 2008.
  11. Tammy Weick (2010). "The Hermit Crab Patch". பார்த்த நாள் November 2010.
  12. Linda Lombardi (2008). "Hermit crabs can be fun, long-lasting pets". The Olympian (The Associated Press). http://www.theolympian.com/living/story/519995.html. பார்த்த நாள்: October 2008.
  13. Stacy (2008). "How old is my hermit crab?". crabstreetjournal.com. பார்த்த நாள் August 2008.

வெளியிணைப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

துறவி நண்டு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

துறவி நண்டு (Hermit crab) என்பது பத்துக்காலி வரிசையைச் சேர்ந்த மெல்லுடலி ஆகும். இதில் தோராயமாக மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கூட்டினைச் சுமந்து கொண்டு இவை தனியாக வாழ்வதால் துறவி நண்டு எனும் பெயர் பெற்றதாய்க் கருதப்படுகிறது. இந் நண்டுகள் வளர வளர தங்கள் கூட்டினையும் மாற்றிக் கொள்ளும். சில வேளைகளில் பல நண்டுகள் ஒன்றாகக் குழுமியிருந்து ஒரு நண்டு கழற்றிய கூட்டை மற்றொரு சிறிய நண்டு எனும் முறையில் வரிசையாக மாற்றிக் கொள்ளும். இந்தக் கூட்டினைப் பெற இவற்றிடையே பெரும் சண்டை நடப்பதும் உண்டு. ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்