புள்ளிச் செங்கால் உள்ளான் (Spotted redshank - Tringa erythropus) என்பது சுகோலோபசிடே என்ற பெரிய பறவைகள் அடங்கிய குடும்பத்தில் உள்ள ஒரு கரையோரப் பறவை ஆகும். இப்பறவையின் பேரினப் பெயர் Tringa என்பது ஆற்று உள்ளானுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்; இனப்பெயரான erythropus என்பது பண்டைய கிரேக்கச் சொல்லான eruthros, அதாவது, "சிவப்பு", மற்றும் pous, அதாவது "கால்" இவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.[2]
இவ்வுள்ளான் வட ஸ்காண்டிநேவியா, வட ஆசியப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர் காலத்தில் பிரித்தானியத் தீவுகளின் தென் பகுதி, பிரான்சு, மெடிட்டரினியன் பகுதி, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளுக்கு வலசை போகிறது.[3] இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு வலசை வரும் இப்பறவை, தமிழகத்தின் வட பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.[4]
29 - 32 செமீ அளவு உடையது. அலகு முடியும் இடமும் கால்களும் சிகப்பாக இருக்கும். இதன் அலகு பவளக்காலியின் அலகை விட நீளமாக இருக்கும்; இனப்பெருக்கம் இல்லாத காலத்தில் இறக்கையின் மேல் புறம் வெளுத்த சாம்பல் நிறத்திலும் கீழ் புறம் பவளக்காலியை விட வெள்ளையாக இருக்கும். ஆனால் இனப்பெருக்க காலத்தில் (முக்கியமாக) கீழ்ப்பாகங்கள் கருப்பாக இருக்கும். டூ யிக் என்ற வேறுபட்ட சத்தத்துடன் பறந்து போகும்.[5]
புள்ளிச் செங்கால் உள்ளான் (Spotted redshank - Tringa erythropus) என்பது சுகோலோபசிடே என்ற பெரிய பறவைகள் அடங்கிய குடும்பத்தில் உள்ள ஒரு கரையோரப் பறவை ஆகும். இப்பறவையின் பேரினப் பெயர் Tringa என்பது ஆற்று உள்ளானுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்; இனப்பெயரான erythropus என்பது பண்டைய கிரேக்கச் சொல்லான eruthros, அதாவது, "சிவப்பு", மற்றும் pous, அதாவது "கால்" இவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.