dcsimg

கரடிப் பூனை ( Tamil )

provided by wikipedia emerging languages

கரடிப் பூனை (About this soundஒலிப்பு ) (binturong (/bɪnˈtrɒŋ/ என்பது ஒருவகை பாலூட்டி விலங்கு ஆகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றது. இது அழிவாய்ப்பு இனம் என்று செம்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று பத்தாண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 30% வரை குறைந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இது ஒரு இரவாடி. பகல் நேரத்தில் மரப் பொந்துகளில் இருக்கும். இந்தியாவில் அசாம், சிக்கிம் காடுகளில் காணப்படுகிறது.

பண்புகள்

இதன் உடல் நீண்டும், தடிமனாகவும் இருக்கும். கால்கள் சிறியதாகவும், உடலில் அடர்த்தியான கருப்பு முடியோடு, வெள்ளை அல்லது மங்கிய மஞ்சள்நிற முடிகளும் இருப்பதால் நரைத்தது போல தோன்றும். இதன் குறுகிய காதுகளின் முனைகளில் நீளக் கொத்தாக முடி இருக்கும். இதன் பற்கள் சிறியதாக இருக்கும். புதர் மண்டியது போன்று முடியோடு காணப்படும் இதன் வால், இன்னொருகரம் போல மரக்கிளைகளை பிடிக்க வல்லது. இவை சிறிய பாலூட்டிகள், பறவைகள், மீன், மண்புழுக்கள், பூச்சிகள் பழங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றன.

இவற்றின் வால், கிட்டத்தட்ட தலைமுதல் உடல்வரையான உடல் நீளத்தை ஒத்து இருக்கும். உடல் 28 இல் இருந்து 33 அங்குலம் (71 இல் இருந்து 84 செமீ) நீளம் இருக்கும். வால் 26 இல் இருந்து 27 அங்குலம் (66 இல் இருந்து 69 செமீ) நீளம் இருக்கும்.[3] சில கரடிப் பூனைகள் தலைமுதல் உடல்வரை 2 அடி 6 அங்குலம் (76 செமீ) அளவிலிருந்து 3 அடி (91 செமீ) நீளம் கொண்டவையாகவும், வால் 2 அடி 4 அங்குலம் (71 செமீ) கொண்டதாகவும் இருக்கின்றன.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Arctictis binturong". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
  2. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 549. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000273.
  3. Blanford, W. T. (1888–91). 57. Arctictis binturong. Pages 117–119 in: The fauna of British India, including Ceylon and Burma. Mammalia. Taylor and Francis, London.
  4. Arivazhagan, C. and K. Thiyagesan (2001). Studies on the Binturongs (Arctictis binturong) in captivity at the Arignar Anna Zoological Park, Vandalur. Zoos' Print Journal 16 (1): 395–402.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கரடிப் பூனை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கரடிப் பூனை (About this soundஒலிப்பு ) (binturong (/bɪnˈtuːrɒŋ/ என்பது ஒருவகை பாலூட்டி விலங்கு ஆகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றது. இது அழிவாய்ப்பு இனம் என்று செம்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று பத்தாண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 30% வரை குறைந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு இரவாடி. பகல் நேரத்தில் மரப் பொந்துகளில் இருக்கும். இந்தியாவில் அசாம், சிக்கிம் காடுகளில் காணப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்