ஈட்டிப்பல் பன்றி (Peccary) என்பது நடு, தென் அமெரிக்காவில் வாழும் காட்டுப் பன்றி போல் தோற்றமளிக்கும் ஆனால் வேறான, உயிரினக் குடும்பம். எசுப்பானிய மொழியில் இக்குடும்பத்தினைச் சேர்ந்த விலங்குகளை ஃகாபலி (Jabali) என்றும், போர்த்துகீச மொழியில் ஃகாவலி என்றும் அழைக்கின்றனர். இவ் விலங்குக் குடும்பம், பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படைக் குளம்படி வரிசையில் உள்ள தாயாசுடீ (Tayassuidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பன்றிபோல் அளவுடைய விலங்குகள். தாயாசுடீ என்னும் சொல் தூப்பி மக்களின் மொழியில் உண், உண்ணுதல் என்னும் பொருள் தரும் தாயசு (tayassu, tayaçu) என்னும் சொல்லில் இருந்து பெற்று, 1858 இல் இருந்து ஆங்கிலத்தில் வழங்கி வருகிறார்கள்.[1]. தாயாசுடீ குடும்பம் சூயினா (Suina) என்றழைக்கப்படும் பன்றிகளின் துணைவரிசையைச் சேர்ந்த ஒன்று.[2].இலத்தீன் மொழியில் சூ (su) என்றால் பன்றி என்றுபொருள்.
ஈட்டிப்பல் பன்றிகள் ஏறத்தாழ 90 முதல் 130 செமீ (3-4 அடி) நீளம் வரை வளரக்கூடியவை. இவை ஏறத்தாழ 20-40 கிலோகிராம் (44-88 பவுண்டு) எடை கொண்டிருக்கக்கூடும். ஓரளவுக்குப் பன்றிகளைப்போலவே, மூக்கும் பல்லும் கொண்டவை. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் காட்டுப்பன்றிகளின் பல் வளைந்து இருக்கும், ஆனால் ஈட்டிப்பல் பன்றிகளின் பற்கள் ஈட்டியைப் போல் நேராக இருக்கும். பன்றிகளைப் போலவே காலின் நடு இரு விரல்களைப் பயன்படுத்துகின்றன. இதன் வயிறு மூன்று பாகங்களாக உள்ளன. ஆனால் அசைபோடும் விலங்கின் இயக்கம் போன்றதல்ல.[3].
ஈட்டிப்பல் பன்றி ஒரு அனைத்துண்ணி ஆகும். பெரும்பாலும் இதன் உணவு கிழங்குகளும், சிதைகளும் கொட்டைகளும், பழங்களும், புல்லும் என்றாலும், சிறு விலங்குகளையும் உண்ணும்.
இதன் பல்லின் வகையடுக்கு கீழ்க்காணுமாறு உள்ளது:
பல் வகையடுக்கு 2.1.3.3 3.1.3.3தாயாசுடீ - நெதர்லாந்தில் உள்ள ஆர்ன்னெம் (Arnhem)என்னும் இடத்தில் உள்ள பர்கர் உயிரினக் காட்சியகத்தில்.
ஈட்டிப்பல் பன்றி (Peccary) என்பது நடு, தென் அமெரிக்காவில் வாழும் காட்டுப் பன்றி போல் தோற்றமளிக்கும் ஆனால் வேறான, உயிரினக் குடும்பம். எசுப்பானிய மொழியில் இக்குடும்பத்தினைச் சேர்ந்த விலங்குகளை ஃகாபலி (Jabali) என்றும், போர்த்துகீச மொழியில் ஃகாவலி என்றும் அழைக்கின்றனர். இவ் விலங்குக் குடும்பம், பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படைக் குளம்படி வரிசையில் உள்ள தாயாசுடீ (Tayassuidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பன்றிபோல் அளவுடைய விலங்குகள். தாயாசுடீ என்னும் சொல் தூப்பி மக்களின் மொழியில் உண், உண்ணுதல் என்னும் பொருள் தரும் தாயசு (tayassu, tayaçu) என்னும் சொல்லில் இருந்து பெற்று, 1858 இல் இருந்து ஆங்கிலத்தில் வழங்கி வருகிறார்கள்.. தாயாசுடீ குடும்பம் சூயினா (Suina) என்றழைக்கப்படும் பன்றிகளின் துணைவரிசையைச் சேர்ந்த ஒன்று..இலத்தீன் மொழியில் சூ (su) என்றால் பன்றி என்றுபொருள்.