ஈரலுருத் தாவரங்கள் (liverworts) என்பது பிரிவு பிரயோபைற்றாவைச் சேர்ந்த கலனிழையமற்ற தாவரங்களாகும். இவை ஏனைய பிரயோபைற்றுக்கள் போல தம் வாழ்க்கைக் காலத்தில் ஆட்சியுடைய ஒருமடிய புணரித்தாவரச் சந்ததியைக் கொண்டுள்ளன. அதாவது எம் கண்களுக்குப் புலப்படும் ஈரலுருத் தாவரங்கள் அனைத்தும் புணரித் தாவரங்களாகும். அனேகமானவை பிரிவிலி உடலமைப்பையும் சில இலை போன்ற கட்டமைப்புக்களையும் கொண்டுள்ளன. எனினும் எவற்றிலும் உண்மையான இலையோ, தண்டோ, வேரோ காணப்படுவதில்லை. நீர் மற்றும் கனியுப்புக்களின் அகத்துறிஞ்சலுக்காக வேர்ப்போலி என்னும் கட்டமைப்புக்கள் பிரிவிலி உடலிலிருந்து உருவாகும். ஈரலுருத் தாவரங்கள் பொதுவாகச் சிறியவை: 2–20 mm அகலமும், 10 cm நீளமுமாக இருக்கும். இவை உலகம் முழுவதும் ஈரலிப்பான பிரதேசங்களில் வாழ்கின்றன. இவற்றில் சில இனங்கள் மெய்ப்பாசிகளை ஒத்திருந்தாலும், இவற்றிலுள்ள ஒருகலத்தாலான வேர்ப்போலிகள் இவற்றை மெய்ப்பாசிகளிடமிருந்து வேறுபடுத்துகின்றன.
வாழ்க்கை வட்டம்: