dcsimg

கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் ( Tamil )

provided by wikipedia emerging languages

தமிழ்நாட்டில் காணப்படும் கீச்சான் பறவைகளில் இது ஒரு வகையாகும்.

பெயர்கள்

தமிழில் :கருஞ்சிப்பு முதுகுக் கீச்சான்

ஆங்கிலத்தில் :Bay-backed shrike

அறிவியல் பெயர் :Lanius vittatus

உடலமைப்பு

18 செ.மீ - பருத்த தலையும் முனைவளைந்த மேல் அலகும் நீண்டு குறுகிய வாலும் உடைய இதன் நெற்றியும் கண்பட்டையும் கருப்பாக இருக்கும். உச்சந்தலை வெண்மை, முதுகு செம்பழுப்பு, பிட்டம் வெள்ளை, மார்பும் வயிறும் வெள்ளை. [2]

காணப்படும் பகுதிகள் & உணவு

முள் மரங்களோடு கூடிய காடுகள் விளைநிலங்களைச் சார்ந்த வேலிகள் தந்திக் கம்பிகளிலும் தனித்து அமர்ந்து காணப்படும். தத்துக்கிளி, சில வண்டு, ஓணான் ஆகியவற்றை உணவாக உண்ணும்.

இனப்பெருக்கம்

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையான பருவத்தில் கரவேல், இலந்தை, வேலிக் கருவை போன்ற மரங்களின் கவட்டியில் கூடமைத்து 3 முதல் 5 முட்டைகள் இடும்.

மேற்கோள்கள்

Bay-Backed Shrike -- Bd Environment

  1. "Lanius vittatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க . ரத்னம் -மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:118
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

தமிழ்நாட்டில் காணப்படும் கீச்சான் பறவைகளில் இது ஒரு வகையாகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்