ஆபிரிக்கப் பென்குயின் (Spheniscus demersus) என அழைக்கப்படும் கறுப்புக் காற் பென்குயின் தெற்கு ஆபிரிக்க நீர்நிலைகளை அண்டி காணப்படும் பென்குயின் ஆகும்.[2] கழுதைகளைப் போல இவை ஒலி எழுப்புவதால் "ஜக்கழுதப் பென்குயின்" எனவும் இவை அழைக்கப்படுகின்றன. அலைக்கற்றை வடிவ உடலைக்கொண்டிருப்பதுடன் மற்றைய பென்குயின்கள் போலவே இவற்றாலும் பறக்க முடியாது. வயது வந்த ஆபிரிக்கப் பென்குயின்களின் நிறை 2.2–3.5 kg (4.9–7.7 lb) ஆகும். மேலும் உயரம் 60–70 cm (24–28 in) ஆகும். இவற்றின் கண்களின் மேலுள்ள இளஞ்சிவப்புச் சுரப்பிகள் அவற்றின் வெப்பநிலையைப் பேண உதவுகின்றன. வெப்பம் அதிகரிக்கும் போது மேலதிகஉடல் வெப்பம் அச்சுரப்பிக்கும் புகுந்து அச்சுரப்பியை கடும் நிறமாக மாறுகின்றது.[3]
ஆபிரிக்கப் பென்குயின் (Spheniscus demersus) என அழைக்கப்படும் கறுப்புக் காற் பென்குயின் தெற்கு ஆபிரிக்க நீர்நிலைகளை அண்டி காணப்படும் பென்குயின் ஆகும். கழுதைகளைப் போல இவை ஒலி எழுப்புவதால் "ஜக்கழுதப் பென்குயின்" எனவும் இவை அழைக்கப்படுகின்றன. அலைக்கற்றை வடிவ உடலைக்கொண்டிருப்பதுடன் மற்றைய பென்குயின்கள் போலவே இவற்றாலும் பறக்க முடியாது. வயது வந்த ஆபிரிக்கப் பென்குயின்களின் நிறை 2.2–3.5 kg (4.9–7.7 lb) ஆகும். மேலும் உயரம் 60–70 cm (24–28 in) ஆகும். இவற்றின் கண்களின் மேலுள்ள இளஞ்சிவப்புச் சுரப்பிகள் அவற்றின் வெப்பநிலையைப் பேண உதவுகின்றன. வெப்பம் அதிகரிக்கும் போது மேலதிகஉடல் வெப்பம் அச்சுரப்பிக்கும் புகுந்து அச்சுரப்பியை கடும் நிறமாக மாறுகின்றது.