ஹிலியாம்போரா (Heliamphora) என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சார்ந்த செடி ஆகும்.ஹிலியாம்போரா என்றால் கிரேக்க மொழியில் சூரியனின் சாடி என்று பொருளாகும்..[1] ஹிலியாம்போரா வகையில் மூன்று வகையில் 23 இனச்செடிகள் உள்ளன.[2] இது தென் அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் கயானா பகுதியிலும் காணப்படுகிறது. இவை நீர்க்கசிவு உள்ள இடங்களில் வளர்கிறது. இவை பல பருவச் செடியாகும். இதன் தண்டு தரையில் ஊர்ந்து வளரும் மட்டத்தண்டு கிழங்காக இருக்கும். இதன் இலைகள் மட்டத்தண்டு கிழங்கிலிருந்து நேராக மேல்நோக்கி வளர்ந்திருக்கும். இவை ஒரு அடி முதல் இரண்டு அடி உயரம் வரை வளரும். இது வட்ட வடிவில் அமைந்திருக்கும். இதன் இலைகளே பூச்சிகளைப் பிடிக்கும் சாடிகளாக மாறியுள்ளது.
ஹிலியாம்போரா (Heliamphora) என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சார்ந்த செடி ஆகும்.ஹிலியாம்போரா என்றால் கிரேக்க மொழியில் சூரியனின் சாடி என்று பொருளாகும்.. ஹிலியாம்போரா வகையில் மூன்று வகையில் 23 இனச்செடிகள் உள்ளன. இது தென் அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் கயானா பகுதியிலும் காணப்படுகிறது. இவை நீர்க்கசிவு உள்ள இடங்களில் வளர்கிறது. இவை பல பருவச் செடியாகும். இதன் தண்டு தரையில் ஊர்ந்து வளரும் மட்டத்தண்டு கிழங்காக இருக்கும். இதன் இலைகள் மட்டத்தண்டு கிழங்கிலிருந்து நேராக மேல்நோக்கி வளர்ந்திருக்கும். இவை ஒரு அடி முதல் இரண்டு அடி உயரம் வரை வளரும். இது வட்ட வடிவில் அமைந்திருக்கும். இதன் இலைகளே பூச்சிகளைப் பிடிக்கும் சாடிகளாக மாறியுள்ளது.