சிம்மேரா மோன்ஸ்ட்ரோசா (Chimaera monstrosa) என்னும் மீன், முயல் மீன் அல்லது எலி மீன் (rabbit fish, rat fish) என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இம்மீன் வடகிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழக்கூடிய மீனினம் ஆகும். சிம்மோிடே எனும் குடும்பத்தைச் சார்ந்தது.[1]
முயல் மீன் 1.5 மீட்டர் நீளமும், 2.5 கி. எடையும் கொண்டது.[2] இது கருஞ்சிவப்பு வண்ணமும், பளிங்கிக் கல் போன்ற வெள்ளை நிறக்கோடுகள் உடலில் எல்லா திசைகளிலும் காணப்படுகிறது. கண்கள் பொிதாகவும் பச்சை வண்ணத்தில் கண் வில்லைகளைக் (lens) கொண்டுள்ளது. தலைப்பகுதியில் பக்கவாட்டுக் கோடு தெளிவாகத் தொிகின்றது. இம்மீனின் முதுகுப்பக்கத் துடுப்பில் குறைந்தளவு விசமுள்ள முள் காணப்படுகிறது, இது பிற உயிர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தக் கூடியது.[2] முயல் மீன், முட்டையிட்டு குஞ்சி பொாிக்கும் இனத்தைச் சார்ந்தது. இம்மீன் சிறிய கூட்டமாகவே காணப்படும். இது, கடலின் அடியில் காணப்படும் முதுகெலும்பில்லாத உயிாிகளையே உணவாகக் கொள்கின்றன.[2]
முயல் மீன்கள் 40 முதல் 1,663 மீ (131-5,456 அடி) ஆழத்தில் வாழக்கூடியது. இம்மீன்கள், பெரும்பாலும் 300 முதல் 500 மீ (980-1,640 அடி) ஆழத்தில் பதிவாகியுள்ளன.[1] வடக்கு பகுதியில் உள்ளதை விட பொதுவாக தெற்கு பகுதியில் இம்மீன்கள் ஆழத்தில் காணப்படுகின்றன.[2]இவை, மொராக்கோவின் வடக்கிலிருந்து, வடக்கு நார்வே மற்றும் ஐஸ்லாந்து வரை வடகிழக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் பரவி காணப்படுகின்றன. இம்மீன்கள், மத்தியதரைக்கடல் பகுதியிலும் காணப்படுகின்றன, எனினும் கிழக்கு பகுதியல் அாிதாக உள்ளது. வடக்கு மற்றும் மத்திய அட்ரியாடிக் கடலில் இது அறியப்படாத மீனினம் ஆகும்.[1] தென்னாபிரிக்காவில் இருந்து இம்மீன்களுக்கான பதிவுகள் கேள்விக்குரியாகவே உள்ளது.[1][2] நோயுற்ற அல்லது இறந்த மீன்கள் சில நேரங்களில் ஆழமற்ற தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகின்றன.
சிம்மேரா மோன்ஸ்ட்ரோசா (Chimaera monstrosa) என்னும் மீன், முயல் மீன் அல்லது எலி மீன் (rabbit fish, rat fish) என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இம்மீன் வடகிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழக்கூடிய மீனினம் ஆகும். சிம்மோிடே எனும் குடும்பத்தைச் சார்ந்தது.