dcsimg

பேராமை ( Tamil )

provided by wikipedia emerging languages

பேராமை அல்லது ஏழுவரி ஆமை, ஓங்கல் ஆமை, தோல்முதுகு ஆமை (Leather back turtle or Luth) எனவும் அழைக்கப்படும்[4] இந்த ஆமையின் அறிவியல் பெயர் "Dermochelys Coriacea" ஆகும். இது கடல் ஆமைகளின் வகைகளுள் ஒன்றாகும். உலகத்திலேயே மிகவும் பெரிய கடல் ஆமை இதுதான்.[5] ஏறத்தாழ 1–1.75 மீ (3.3–5.7 அடி) நீளமும் 250 - 700 கிலோவரை எடையும் இருக்கும். இதன் மிக மென்மையான மேல் ஓடு சாம்பல் நிறம் கலந்த தவிட்டு வண்ணத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும்.[6][7] மழைக் காலத்தில் இது கரைக்கு வந்து, ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி முட்டைகள் இடும். ஒரு முறையில் 80 லிருந்து 100 முட்டைகள் வரை இடும். இவ்வகை ஆமைகளை, இவற்றின் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் மனிதர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.

 src=
மனிதனுடம் ஒப்பிடுகையில் இந்த வகை ஆமையின் அளவு

உசாத்துணை

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 வார்ப்புரு:Harnvb
  2. வார்ப்புரு:Harnvb
  3. Fritz Uwe; Peter Havaš (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 174–176. ISSN 18640-5755. Archived from the original on 2010-12-17. http://www.webcitation.org/5v20ztMND. பார்த்த நாள்: 29 May 2012.
  4. "எழுத்தறிவித்த மூராங்குச்சி". கட்டுரை. தி இந்து (2016 அக்டோபர் 8). பார்த்த நாள் 10 அக்டோபர் 2016.
  5. "WWF - Leatherback turtle". Marine Turtles. World Wide Fund for Nature (WWF) (16 February 2007). பார்த்த நாள் 9 September 2007.
  6. "Species Fact Sheet: Leatherback Sea Turtle". Caribbean Conservation Corporation & Sea Turtle Survival League. Caribbean Conservation Corporation (29 December 2005). பார்த்த நாள் 6 September 2007.
  7. Fontanes, F. (2003). "ADW: Dermochelys coriacea: Information". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்த்த நாள் 17 September 2007.

வெளியிணைப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பேராமை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பேராமை அல்லது ஏழுவரி ஆமை, ஓங்கல் ஆமை, தோல்முதுகு ஆமை (Leather back turtle or Luth) எனவும் அழைக்கப்படும் இந்த ஆமையின் அறிவியல் பெயர் "Dermochelys Coriacea" ஆகும். இது கடல் ஆமைகளின் வகைகளுள் ஒன்றாகும். உலகத்திலேயே மிகவும் பெரிய கடல் ஆமை இதுதான். ஏறத்தாழ 1–1.75 மீ (3.3–5.7 அடி) நீளமும் 250 - 700 கிலோவரை எடையும் இருக்கும். இதன் மிக மென்மையான மேல் ஓடு சாம்பல் நிறம் கலந்த தவிட்டு வண்ணத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும். மழைக் காலத்தில் இது கரைக்கு வந்து, ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி முட்டைகள் இடும். ஒரு முறையில் 80 லிருந்து 100 முட்டைகள் வரை இடும். இவ்வகை ஆமைகளை, இவற்றின் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் மனிதர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.

 src= மனிதனுடம் ஒப்பிடுகையில் இந்த வகை ஆமையின் அளவு
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்