dcsimg

வெள்ளை வால் குழிமுயல் ( Tamil )

provided by wikipedia emerging languages

வெள்ளை-வால் ஜாக் குழிமுயல் (ஆங்கிலப்பெயர்: White-tailed Jackrabbit, உயிரியல் பெயர்: Lepus townsendii), அல்லது புல்வெளி முயல் அல்லது வெள்ளை ஜாக் என்பது மேற்கு வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு முயல் இனம் ஆகும். எல்லா முயல்கள் மற்றும் குழிமுயல்கள் போலவே இதுவும் லகோமோர்பா வரிசையில் லெபோரிடே குடும்பத்தில் ஒரு உறுப்பினராகும். இது ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து குட்டிகளை ஈனும். தாவரங்களுக்கு இடையில் மறைந்தவாறு நிலத்தின் தாழ்வான பகுதிகளில் இவை குட்டிகளை ஈனும். இந்த ஜாக் குழிமுயலில் இரண்டு துணையினங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு துணையினம் (L. townsendii townsendii) ராக்கி மலைகளுக்கு மேற்கிலும் மற்றொரு துணையினம் (L. townsendii campanius) ராக்கி மலைகளுக்கு கிழக்கிலும் வாழ்கிறது.[2]

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வெள்ளை வால் குழிமுயல்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

வெள்ளை-வால் ஜாக் குழிமுயல் (ஆங்கிலப்பெயர்: White-tailed Jackrabbit, உயிரியல் பெயர்: Lepus townsendii), அல்லது புல்வெளி முயல் அல்லது வெள்ளை ஜாக் என்பது மேற்கு வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு முயல் இனம் ஆகும். எல்லா முயல்கள் மற்றும் குழிமுயல்கள் போலவே இதுவும் லகோமோர்பா வரிசையில் லெபோரிடே குடும்பத்தில் ஒரு உறுப்பினராகும். இது ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து குட்டிகளை ஈனும். தாவரங்களுக்கு இடையில் மறைந்தவாறு நிலத்தின் தாழ்வான பகுதிகளில் இவை குட்டிகளை ஈனும். இந்த ஜாக் குழிமுயலில் இரண்டு துணையினங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு துணையினம் (L. townsendii townsendii) ராக்கி மலைகளுக்கு மேற்கிலும் மற்றொரு துணையினம் (L. townsendii campanius) ராக்கி மலைகளுக்கு கிழக்கிலும் வாழ்கிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்