dcsimg

ஓமோ சப்பியன்சு ( Tamil )

provided by wikipedia emerging languages

ஓமோ சப்பியன்சு (homo sapiens, "அறிவுள்ள மனிதன்") என்பது இன்று உலகில் வாழும் ஒரே மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இருசொற் பெயர் அல்லது அறிவியற் பெயர் ஆகும். ஓமோ (homo) மனிதப் பேரினத்தின் அறிவியற் பெயர். ஓமோ பேரினத்துக்குள் நியண்டர்தால்கள் உள்ளிட்ட பல ஒமினிட் (hominid) அற்றுவிட்ட இனங்கள் அடங்கும். ஓமோ பேரினத்தில் தப்பியிருக்கும் ஒரே இனம் ஓமோ சப்பியன்சு ஆகும். நவீன மனிதர்கள் ஓமோ சப்பியன்சு சப்பியன்சு என்னும் துணை இனத்தைச் சேர்ந்தோர். இது அவர்களை, அவர்களது நேரடி மூதாதையாகக் கருதப்படும் ஓமோ சப்பியன்சு இடல்ட்டுவிலிருந்து வேறுபடுத்துகிறது. ஓமோ சப்பியன்சுகளின் புத்திக் கூர்மையும், நெகிழ்வுத் தன்மையும் அவர்களை உலகின் மிகச் செல்வாக்குள்ள இனமாக ஆக்கியுள்ளது.[1]

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஓமோ சப்பியன்சு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

ஓமோ சப்பியன்சு (homo sapiens, "அறிவுள்ள மனிதன்") என்பது இன்று உலகில் வாழும் ஒரே மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இருசொற் பெயர் அல்லது அறிவியற் பெயர் ஆகும். ஓமோ (homo) மனிதப் பேரினத்தின் அறிவியற் பெயர். ஓமோ பேரினத்துக்குள் நியண்டர்தால்கள் உள்ளிட்ட பல ஒமினிட் (hominid) அற்றுவிட்ட இனங்கள் அடங்கும். ஓமோ பேரினத்தில் தப்பியிருக்கும் ஒரே இனம் ஓமோ சப்பியன்சு ஆகும். நவீன மனிதர்கள் ஓமோ சப்பியன்சு சப்பியன்சு என்னும் துணை இனத்தைச் சேர்ந்தோர். இது அவர்களை, அவர்களது நேரடி மூதாதையாகக் கருதப்படும் ஓமோ சப்பியன்சு இடல்ட்டுவிலிருந்து வேறுபடுத்துகிறது. ஓமோ சப்பியன்சுகளின் புத்திக் கூர்மையும், நெகிழ்வுத் தன்மையும் அவர்களை உலகின் மிகச் செல்வாக்குள்ள இனமாக ஆக்கியுள்ளது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்