dcsimg

கேபிபாரா ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
கேபிபாராவின் மேல் ஒரு மஞ்சள் தலை கரகாரா

கேபிபாரா (capybara, Hydrochoerus hydrochaeris) என்பது உலகில் வாழும் மிகப்பெரிய கொறிணி ஆகும். இது சிகுயிரே மற்றும் கர்பின்ச்சோ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹைட்ரோகோயேருஸ் பேரினத்தின் உறுப்பினர் ஆகும். இப்பேரினத்தின் வாழும் மற்றொரு உறுப்பினர் சிறிய கேபிபாரா (ஹைட்ரோகோயேருஸ் இஸ்த்மியுஸ்) ஆகும். கினி எலி, பாறை கேவி (தென் அமெரிக்க கொறிணி) ஆகியவை இதன் நெருங்கிய உறவினர்கள் ஆகும். அகோடி, சின்சில்லா, கோய்பு ஆகியவை இதன் தூரத்து உறவினர்கள் ஆகும். இவை தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். இவை சவானாக்கள் மற்றும் அடர்ந்த காடுகளில் தண்ணீருக்கு அருகில் வாழ்கின்றன. இவை கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இவற்றின் கூட்டத்தில் 100 உறுப்பினர்கள் வரை இருக்கும். ஆனால் பொதுவாக 10-20 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக இருக்கும். இவை இவற்றின் இறைச்சி மற்றும் தோலுக்காக வேட்டையாடப்படுகின்றன. இதன் தடிமனான தோலில் இருந்து பெறப்படும் கொழுப்பு, மருந்து வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் இயங்கு படம் [3]

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கேபிபாரா: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= கேபிபாராவின் மேல் ஒரு மஞ்சள் தலை கரகாரா

கேபிபாரா (capybara, Hydrochoerus hydrochaeris) என்பது உலகில் வாழும் மிகப்பெரிய கொறிணி ஆகும். இது சிகுயிரே மற்றும் கர்பின்ச்சோ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹைட்ரோகோயேருஸ் பேரினத்தின் உறுப்பினர் ஆகும். இப்பேரினத்தின் வாழும் மற்றொரு உறுப்பினர் சிறிய கேபிபாரா (ஹைட்ரோகோயேருஸ் இஸ்த்மியுஸ்) ஆகும். கினி எலி, பாறை கேவி (தென் அமெரிக்க கொறிணி) ஆகியவை இதன் நெருங்கிய உறவினர்கள் ஆகும். அகோடி, சின்சில்லா, கோய்பு ஆகியவை இதன் தூரத்து உறவினர்கள் ஆகும். இவை தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். இவை சவானாக்கள் மற்றும் அடர்ந்த காடுகளில் தண்ணீருக்கு அருகில் வாழ்கின்றன. இவை கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இவற்றின் கூட்டத்தில் 100 உறுப்பினர்கள் வரை இருக்கும். ஆனால் பொதுவாக 10-20 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக இருக்கும். இவை இவற்றின் இறைச்சி மற்றும் தோலுக்காக வேட்டையாடப்படுகின்றன. இதன் தடிமனான தோலில் இருந்து பெறப்படும் கொழுப்பு, மருந்து வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இயங்கு படம்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்