ஆசுக்கர் மீன் (ஆஸ்கார் மீன், ஓஸ்கார் மீன்) (Oscar (fish); என்பது சிசிலிட் குடும்பத்திலிருந்து புலி ஆசுக்கர், வெல்வெட் சிச்லிட், மற்றும் பளிங்கு சிச்லிட் போன்ற பல பொதுவான பெயர்களில் அறியப்படுகிறது.[1] தென் அமெரிக்காவின், வெப்ப மண்டல பகுதிகளில் இயற்கையாகவே வாழுகூடிய இவ்இனங்கள் , ஏ.செல்லடஸ் மாதிரிகள் பெரும்பாலும் உள்ளூர் சந்தைகளில் ஒரு உணவுவகை மீன் போன்று விற்பனைக்கு காணப்படுகின்றன.[2] இந்த மீன் வகையை சீனா, ஆத்திரேலியா, மற்றும் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட மற்ற பகுதிகளில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாடுகளில் ஒரு பிரபலமான நீர்வாழ் உயிரின காட்சி மீன்களாக கருதப்படுகிறது.[3]
இந்த மீன் இனங்களை முதலில் 1831 ஆம் ஆண்டு, லூயிஸ் அகாசிஸ் (Louis Agassiz) என்பவரால் லோபோடேஸ் ஆஸெல்லாட்டஸ் (Lobotes ocellatus) என விவரிக்கப்பட்டது, அப்போது இந்த இனத்தை கடல் சார்ந்த உயிரினம் தவறுதலாக நம்பப்பட்டது; பின்னாளில் இது அஸ்ட்ரோனோடஸ் (Astronotus) எனும் பேரினத்தின் வகையைச்சார்ந்ததாக அறியப்பட்டது.[4] இந்த இனத்தில் பல இளநிலை மீன்கள் ஒத்திசைவுகளைக் கொண்டிருக்கின்றன: அவைகள், அகாரா கம்ப்ரெஸ்சஸ் (Acara compressus), அகாரா ஹைப்போஸ்ட்டிகா, (Acara hyposticta), அஸ்ட்ரோனாட்டஸ் ஆஸெல்லாட்டஸ் ஸீப்ரா (Astronotus ocellatus zebra), மற்றும் அஸ்ட்ரோனாட்டஸ் ஆர்பிகுலடஸ் (Astronotus orbiculatus) போன்றவைகள் ஆகும்.[5]
இந்த வகை மீன்கள், சுமார் 45 சென்டிமீட்டர் நீளமும் (18 அங்குலம்), மற்றும் 1. 6 கிலோகிராம் (3.5 எல்பி) எடை வரையும் வளரக்கூடியதாக, அகந்த்நாத்தஸ் ஆஸெல்லாட்டஸ் (Acanthognathus ocellatus) உதாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காடார்ந்த பகுதிகளில் பிடிக்கப்படும் இவ்வகை இனங்கள், பொதுவாக இருண்ட வால் பகுதியும் மற்றும் முதுகு துடுப்பு கீழ் மஞ்சள் வளைய புள்ளிகள் அல்லது பொட்டுக்கண் (Ocelli) போன்ற வண்ணம் பூசப்பட்டு காணப்படும்.[6] மேலும் இந்த இனங்கள் அதன் நிறத்தை துரிதமாக மாற்றியமைக்கின்றன, இவற்றில் தனித்துவமான சடங்குகள் மற்றும் பிராந்தியங்களுடனான யுத்த நடத்தைகளை உருவாக்குவதற்கான ஒரு பண்புகளாக உள்ளது.[7] இளம் ஆசுக்கர் மீன்கள், முதிர்ந்த மீன்களிடமிருந்து வேறுபட்ட வண்ணங்களைக் கொண்டிருக்கும், வெள்ளை மற்றும் செம்மஞ்சள் நிறங்களில் அலை அலையுடன் கூடிய பட்டைகளும், மற்றும் தலைப்பகுதிகளில் கட்டுக்கட்டான கோடுகளிடப்பட்டு காணப்படும்.[8]
இந்த அகந்த்நாத்தஸ் ஆஸெல்லாட்டஸ் இனங்கள், பெரு, எக்குவடோர், கொலம்பியா, பிரேசில், மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. மேலும் அமேசான் படுகை, அமேசான் ஆறு, புட்டுமயோ ஆறு (Putumayo River), இரியோ நெக்ரோ (அமேசான்) (Rio Negro (Amazon), சோலிமோஸ் ஆறு (Solimões River), உகாயலி ஆற்று (Ucayali River) நீரோட்ட அமைப்புகள், மற்றும் ஓயாபோக் ஆற்றின் (Oiapoque River) வடிகாலமைப்பு வாழிடமாக கொண்டுள்ளது.[9] இந்த இனங்கள் வழக்கமாக அதன் இயற்கை சூழலில் மெதுவாக நகரும் வெள்ளை நீர் வாழ்விடங்கள் ஏற்படுத்துகின்றன, மேலும் மூழ்கிய கிளைகளின்கீழ் தங்குமிடம் காணப்படுகிறது. இவ்இனங்கள், குளிரான நீர், மற்றும் வெப்பநிலையில் அதன் தாங்க முடியாத வரம்புகளைக் கொண்டுள்ளது, குறைந்த மரண எல்லை 12. 9 பாகை செல்சியசு (55.22 டிகிரி பாரன்ஹீட்) ஆகும்.[10]
ஆசுக்கர் பெரும்பாலும் மீன்வள பரப்பிற்கு இடமளிப்பதோடு, மீன்பிடிக்கும் ஏரி அல்லது ஏரிக்குள் புதிதாக நிறுவப்பட்ட பிரதேசத்தில் மற்ற மீன்களைக் கடக்கும்போது மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும். அதன் சுற்றுப்புறத்தின் அடிப்படையில் மீன் அளவு மற்றும் வன்தாக்கம் பொறுத்து பிரதேசத்தின் அளவு மாறுபடுகிறது. மேலும் இந்த மீன் வகை ஒருமுறை தன் பிரதேசத்தை நிறுவிவிட்டால், பிற மீன்களை துரத்துவதன் மூலம் அது தீவிரமாக பாதுகாக்கும்.[11]
ஆசுக்கர் மீன் (ஆஸ்கார் மீன், ஓஸ்கார் மீன்) (Oscar (fish); என்பது சிசிலிட் குடும்பத்திலிருந்து புலி ஆசுக்கர், வெல்வெட் சிச்லிட், மற்றும் பளிங்கு சிச்லிட் போன்ற பல பொதுவான பெயர்களில் அறியப்படுகிறது. தென் அமெரிக்காவின், வெப்ப மண்டல பகுதிகளில் இயற்கையாகவே வாழுகூடிய இவ்இனங்கள் , ஏ.செல்லடஸ் மாதிரிகள் பெரும்பாலும் உள்ளூர் சந்தைகளில் ஒரு உணவுவகை மீன் போன்று விற்பனைக்கு காணப்படுகின்றன. இந்த மீன் வகையை சீனா, ஆத்திரேலியா, மற்றும் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட மற்ற பகுதிகளில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாடுகளில் ஒரு பிரபலமான நீர்வாழ் உயிரின காட்சி மீன்களாக கருதப்படுகிறது.