dcsimg

முப்புள்ளி புல் மஞ்சள் (பட்டாம்பூச்சி) ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

முப்புள்ளி புல் மஞ்சள் அல்லது மஞ்சள் புல்வெளியாள் (Three-Spot Grass Yellow, [Eurema blanda]) என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் வெள்ளையன்கள் (பியரிடெ) குடும்ப சிறிய வகை மஞ்சள் பட்டாம்பூச்சி.

விளக்கம்

இந்த மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சியின் முன் இறக்கையின் பின்புற உச்சியில் பழுப்பு நிறத் திட்டு இருக்கும். பருவநிலை உலர்ந்து இருக்கும்போது, இந்த பழுப்புத் திட்டை தெளிவாகக் காணலாம். முன்இறக்கைகளின் கீழ்ப்புறம் உடல் அருகே மூன்று புள்ளிகள் காணப்படுவதே இந்த புல்வெளியாள் வகையின் பெயருக்குக் காரணம். இந்த வண்ணத்துப்பூச்சி இறக்கைகளை மடித்து வைத்து இளைப்பாறுவதால் முப்புள்ளிகளை தெளிவாகக் காண்பது கடினம். இவை இறக்கையை விரித்தால் 4 செ.மீ.க்கும் குறைவாகவே இருக்கும்.[1]

குறிப்புக்கள்

  1. ஆதி வள்ளியப்பன் (2018 மார்ச் 17). "மஞ்சள் புல்வெளியாள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 1 ஏப்ரல் 2018.

வெளியிணைப்புக்கள்

  • [1] Life cycle of Eurema blanda.
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

முப்புள்ளி புல் மஞ்சள் (பட்டாம்பூச்சி): Brief Summary ( Tâmil )