dcsimg

Momordica cymbalaria

provided by EOL authors
Momordica cymbalaria (Hook., Fenzl ex Naud.) is a vine of the Momordica genus found in the Indian states of Andhra Pradesh, Karnataka, Madhya Pradesh, Maharashtra and Tamil Nadu.[1] It is used in the local folk medicine as an abortifacient and for the treatment of diabetes mellitus. It is a relative of the bitter melon plant (M. charantia) which is also used against diabetes. The plant has also been named Luffa tuberosa (Roxb.) or Momordica tuberosa (Roxb.) Pharmacological studies indicate possible action of extracts of the plant on several medical conditions. The water extract was reported to have hypoglycemic activity in diabetic rabbits but not in normal rabbits.[2] The ethanol extract was reported to protect rats from isoproterenol-induced myocardial injury.[3]
license
cc-by-3.0
copyright
Wikimedia Foundation
author
(sundar)
original
visit source
partner site
EOL authors

அதலை ( Tamil )

provided by wikipedia emerging languages

அதலை (Momordica cymbalaria) என்பது பாகலுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு கொடி இனமாகும். இதன் வேறு அறிவியற் பெயர்கள்: Luffa tuberosa, Momordica tuberosa ஆகியன. அதலை தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற தென் மாநிலங்களில் மகாராட்டிரத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும் காணப்படுகிறது.[1] பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவத் திறன்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற இடர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.[2]

செடி அமைப்பு

 src=
இந்திய உருவா நாணயத்தை ஒத்த அளவில் ஓர் அதலைக்காய்

அதலைச்செடிகள் பொதுவாகத் தரையில் படர்பவை. சிலவேளைகளில் வயல்வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப்படர்கின்றன. பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக்காலத்தில் காய்ந்து விழுந்துவிட்டாலும் மண்ணுக்கடியிலிருக்கும் இதன் கிழங்கு உயிருடன் இருக்கும். இக்கொடியின் இலைகளின் அடிப்பகுதி இதயவடிவாகவும் (chordate), எஞ்சிய பகுதி ஒருபுறம் சாய்ந்தோ (oblicular), சிறுநீரக வடிவிலோ (reniform) இருக்கும். ஒரே கொடியில் ஆண்-பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். ஐந்து முதல் முப்பது மி.மீ. நீளம் வரை உள்ள ஒவ்வொரு ஆண் மலர்த்தார்த் தண்டிலும் (peduncle) இரண்டு முதல் ஐந்து மலர்கள் வரை இருக்கின்றன. பூந்தார்கள் இழைவடிவாகவும் (filiform), மென்மயிர்ப்படர்ந்து பூவடிச்செதில்களில்லாமலும் இருக்கின்றன. மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் நுனிவளர் தார் அமைப்பில் (racemose) இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர்த்தார் 28 மி.மீ. நீளத்தில் ஒரே ஒரு மலரைத் தாங்கி நிற்கும். காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய வரைகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில் வழுவழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன.[1]

வளர் பருவம்

இக்கொடி பெரும்பாலும் தானாக வளர்வது. இதை முறையாகப் பயிரிட்டு வளர்க்காவிட்டாலும் மற்ற பயிர்கள் விளையும் வயல்களின் வரப்புகளில் இவை வளர்வதை ஊக்குவிப்பர். இக்கொடிகள் பொதுவாக ஐப்பசியில் பூத்து, கார்த்திகை, மார்கழியில் காய்த்து, தைத்திருநாளுக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன.[1]

அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள்

தோட்டக்கலை ஆய்வாளர்களான பார்வதி, குமார் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் தங்களது பல்வேறு ஆய்வுகள் வழியாக அதலைக்காய்களின் கூறுகளைப் பிரித்து அவற்றின் விகித அளவுகளை வெளியிட்டுள்ளனர்.[1] இவ்வாராய்ச்சியின் வழியாக அதலைக்காய்களில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், புரதம் போன்றவற்றின் அளவுகள் ஏறத்தாழ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்காயை முழுவதும் எரித்த சாம்பலைக் கொண்டு இவற்றிலுள்ள வேதிப் பொருட்களின் விகிதத்தையும் அளந்துள்ளனர். இதே முறைகளில் முன்னதாக பாகற்காய்களின் மீது நடத்திய ஆய்வு முடிவுகளையும் ஒப்பீட்டுக்காகத் தந்துள்ளனர்.

மருத்துவத் திறம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மருந்தாய்வர்கள் இவற்றைக் கொண்டு மாந்தரிலும் பிற விலங்குகளிலும் ஆய்வு செய்துள்ளனர். நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்கு ஆட்பட்ட முயல்களின் குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.[4] இச்செடிகளின் கிழங்குகளை அரைத்து எத்தனாலில் கரைத்து எலிகளுக்குப் புகட்டியபோது இதயத்தில் குருதிக்குழாய் அடைப்புகளின் போது ஏற்படும் திசு இறப்பைக் குறைப்பதாகவும் அறிந்துள்ளனர்.[5] கார்பன் டெட்ரா குளோரைடினாலும் பாராசிட்டமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பையும் இவை தடுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.[6]

இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்.[7]

சமையல்

 src=
அதலைக்காய்ப் பொரியல்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாட்டுப்புறத்தில் அதலை காய்க்கும் காலத்தில் அவற்றைப் பறித்து சமையல் செய்து உட்கொள்கின்றனர். முறையாக பயிரிடப்படாமல் தாமாக வளரும் கொடியாதலால் சிலர் மட்டுமே இவற்றின் பயனை அறிந்து பயன்படுத்துகின்றனர். இவற்றை முறையாகச் சமைக்கும் முறைகளும் வெளியில் தெரியாமல் இருந்தன. 1997-ஆம் ஆண்டில் தோட்டக்கலை ஆய்வாளர்கள் பார்வதி, குமார் ஆகியோர் தங்கள் ஆய்வுக்காக இதன் சமையல் முறைகளை உருவாக்கி பொரியல், எண்ணெய் வறுவல், புளிக்குழம்பு, ஊறுகாய், வடகம் ஆகியவற்றைச் செய்து மக்களின் விருப்பத்தைச் சுவை அலகில் அளந்துள்ளனர்.[1] அவர்களுடைய ஆய்வின்படி புளிக்குழம்பையும் வடகத்தையும் மக்கள் பொதுவாக விரும்பினார்களாம். முன்னதில் புளியும், பின்னதில் மோரும் கசப்புச்சுவையைக் குறைப்பதால் அவற்றை மக்கள் விரும்பியதாக அறிகின்றனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Parvathi, S.; Kumar, V. J. F. (2002). "Studies on chemical composition and utilization of the wild edible vegetable athalakkai (Momordica tuberosa)". Plant Foods for Human Nutrition 57 (3/4): 215–222. doi:10.1023/A:1021884406024.
  2. Duke, Jim. Mary Jo Bogenschutz. ed. Dr. Duke's Phytochemical and Ethnobotanical Databases. http://www.ars-grin.gov/cgi-bin/duke/ethnobot.pl?ethnobot.taxon=Momordica%20tuberosa. பார்த்த நாள்: 2011-06-25.
  3. C. Gopalan; B. V. Rama Sastri; S. C. Balasubramanian; National Institute of Nutrition (India) (1989). Nutritive value of Indian foods. National Institute of Nutrition, Indian Council of Medical Research. http://books.google.com/books?id=biFBAAAAYAAJ. பார்த்த நாள்: 9 July 2011.
  4. B. K. Rao, M. M. Kesavulu, R. Giri, C. Appa Rao (1999), Antidiabetic and hypolipidemic effects of Momordica cymbalaria Hook. fruit powder in alloxan-diabetic rats. Journal of Ethnopharmacology, volume 67, issue 1, pages 103–109., எஆசு:10.1016/S0378-8741(99)00004-5 PubMed
  5. K. Raju, R. Balaraman, Vinoth Hariprasad, M. Kumar, and A. Ali (2008), Cardioprotective Effect Of Momordica Cymbalaria Fenzl In Rats With Isoproterenol-Induced Myocardial Injury. Journal of Clinical and Diagnostic Research, volume 2, issue 1, pages 699–705
  6. Kumar, Pramod; Deval Rao, Lakshmayya and Ramachandra Setty (July 2008). "Antioxidant and hepatoprotective activity of tubers of Momordica tuberosa Cogn. against CCl 4 induced liver injury in rats" (pdf). Indian Journal of Experimental Biology 46: 510-513. http://nopr.niscair.res.in/bitstream/123456789/4538/1/IJEB%2046(7)%20510-513.pdf. பார்த்த நாள்: 2011-06-25.
  7. P., Sethuraman; N. Grahadurai and M. K. Rajan (2010). "Efficacy of Momordica tuberosa leaf extract against the larvae of filarial mosquito, Culex quinquefasciatus" (pdf). Journal of Biopesticides 3 (1): 205-207. http://www.jbiopest.com/users/LW8/efiles/Sethuraman_V31.pdf. பார்த்த நாள்: 2011-06-25.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அதலை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

அதலை (Momordica cymbalaria) என்பது பாகலுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு கொடி இனமாகும். இதன் வேறு அறிவியற் பெயர்கள்: Luffa tuberosa, Momordica tuberosa ஆகியன. அதலை தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற தென் மாநிலங்களில் மகாராட்டிரத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும் காணப்படுகிறது. பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவத் திறன்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற இடர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

Momordica cymbalaria

provided by wikipedia EN

Momordica cymbalaria is a vine of the genus Momordica found in the Indian states of Andhra Pradesh, Karnataka, Madhya Pradesh, Maharashtra, and Tamil Nadu.[1] It is a relative of the bitter melon plant (M. charantia). The plant has also been named Luffa tuberosa (Roxb.) or Momordica tuberosa (Roxb.)

Research

Pharmacological studies have examined possible action of extracts of the plant in animal models of disease. The water extract was reported to have hypoglycemic activity in diabetic rabbits but not in normal rabbits.[2] The ethanol extract was reported to protect rats from isoproterenol-induced myocardial injury.[3]

See also

References

  1. ^ Parvathi, S.; Kumar, V. J. F. (2002). "Studies on chemical composition and utilization of the wild edible vegetable athalakkai (Momordica tuberosa)". Plant Foods for Human Nutrition. 57 (3/4): 215–222. doi:10.1023/A:1021884406024. PMID 12602930. S2CID 42850600.
  2. ^ Rao, B. K.; Kesavulu, M. M.; Giri, R.; Appa Rao, C. (1999). "Antidiabetic and hypolipidemic effects of Momordica cymbalaria Hook. Fruit powder in alloxan-diabetic rats". Journal of Ethnopharmacology. 67 (1): 103–109. doi:10.1016/S0378-8741(99)00004-5. PMID 10616966.
  3. ^ K. Raju; R. Balaraman; Vinoth Hariprasad; M. Kumar & A. Ali (2008). "Cardioprotective Effect Of Momordica Cymbalaria Fenzl In Rats With Isoproterenol-Induced Myocardial Injury". Journal of Clinical and Diagnostic Research. 2 (1): 699–705.
license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors
original
visit source
partner site
wikipedia EN

Momordica cymbalaria: Brief Summary

provided by wikipedia EN

Momordica cymbalaria is a vine of the genus Momordica found in the Indian states of Andhra Pradesh, Karnataka, Madhya Pradesh, Maharashtra, and Tamil Nadu. It is a relative of the bitter melon plant (M. charantia). The plant has also been named Luffa tuberosa (Roxb.) or Momordica tuberosa (Roxb.)

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia authors and editors
original
visit source
partner site
wikipedia EN