dcsimg

கூர்க்கன் ( Tamil )

provided by wikipedia emerging languages

கூர்க்கன் (கோலியாஸ் கிழங்கு, Coleus) ஒரு கிழங்கு வகை தாவரம்.[1]

மருத்தவ பயன்:

கூர்க்கன் கிழங்கு உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது. மேலும் உடலில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கவும், இதயத்துக்கான ரத்த ஓட்டத்தைக் சீராக வைத்திருக்கும் மருந்துகள் தயாரிக்கவும், கணையம், கிட்னி போன்ற பகுதிகளுக்கு தேவைப்படும் மருந்தாக பயன்படுகிறது. முகத்துக்கான அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

வளரும் காலம்:

கிழங்கின் வளர்ச்சி பருவம் 180 நாட்களாகும். இதற்கு அதிகமான நீர் தேவையில்லை.

ஏற்ற மண்:

மழை குறைவான வறண்ட பிரதேசங்களில் கூர்க்கன் கிழங்கை, எளிதாகப் பயிரிட முடியும். மணல் பாங்கான வடிகால் வசதி உள்ள நிலங்களில் கூர்க்கன் கிழங்கு செழித்து வளர்ந்து சிறந்த பலனைக் கொடுக்கும்.

அதிகம் வளரும் இடம்:

தமிழகத்தில் சேலம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாமக்கல், ஈரோடு உள்பட 20 மாவட்டங்களில் சாகுபடி செய்கின்றனர். சின்னசேலம் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட கூர்க்கன் கிழங்கு பயிர் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.சின்னசேலம் அடுத்த நரிக்குறவர் காலனி, நைனார்பாளையம், செம் பாக் குறிச்சி மற்றும் சுற்று பகுதிகளில் கூர்க்கன் கிழங்கு பயிரை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.

ஏற்றுமதி ஆகும் இடங்கள்:

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கூர்க்கன் கிழங்கு பெரும்பகுதி, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் டன் வரை தற்போது ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "AgriInfoMedia". www.agriinfomedia.com. பார்த்த நாள் 2011-02-26.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கூர்க்கன்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கூர்க்கன் (கோலியாஸ் கிழங்கு, Coleus) ஒரு கிழங்கு வகை தாவரம்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்