dcsimg
Image of Spiderwisp
Creatures » » Plants » » Dicotyledons » » Cleomella »

Spiderwisp

Gynandropsis gynandra (L.) Briq.

நிலவேளை ( Tamil )

provided by wikipedia emerging languages

நிலவேளை (Cleome gynandra) [2] அல்லது தைவேளை [3] வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக்கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். 25 செ.மீ முதல் 60 செ.மீ வரை வளரும் தன்மைகொண்டது. இதன் ஒவ்வொரு கிளையிலும் 3 அல்லது 5 இலைகள் அமைந்துள்ளன. இதன் பூக்கள் வெள்ளையும், சிவப்பும் கலந்த கலவையாக உள்ளன. இதன் விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இது ஒரு மூலிகைத்தாவரம் ஆகும்.[4][5]

பெயர்

இத்தாவரமானது வேளை, நல்வேளை, அசகண்டர் ஆகிய பெயர்களைக் கொண்டது. இதன் மலர்கள் பகல் வேளையில் சிறிது தலை குனிந்திருக்கும், மாலை வேளையில் பிரகாசமாக மலர்ந்து சிரிக்கும். இதை வைத்து முற்காலத்தில் மாலை வேளையை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்பதால், ‘வேளை’ என்ற பெயர் உருவாகியிருக்கிறது. நல்ல மருந்தாகச் செயல்படுவதால், ‘நல்’ என்ற அடைமொழி சேர்ந்து ‘நல்வேளை’ என அழைக்கப்படுகிறது.

விளக்கம்

இது ஓராண்டு வளரும் செடி வகையாகும். இத்தாவரம் முழுவதும் பிசுபிசுப்பான ரோம வளரிகள் காணப்படும். நீள் முட்டை வடிவில் ஐந்து சிற்றிலைகளைக் கொண்டிருக்கும்.[6]

மேற்கோள்கள்

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்த்த நாள் January 26, 2014.
  2. [1]
  3. [2]
  4. "Gynandropsis gynandra (L.) Briq.", USDA GRIN Taxonomy, retrieved 28 July 2015
  5. http://tamilseithy.net/95820
  6. டாக்டர் வி.விக்ரம் குமார் (2018 நவம்பர் 17). "நலத்தின் நல்‘வேளை!’". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 1 திசம்பர் 2018.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நிலவேளை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

நிலவேளை (Cleome gynandra) அல்லது தைவேளை வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக்கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். 25 செ.மீ முதல் 60 செ.மீ வரை வளரும் தன்மைகொண்டது. இதன் ஒவ்வொரு கிளையிலும் 3 அல்லது 5 இலைகள் அமைந்துள்ளன. இதன் பூக்கள் வெள்ளையும், சிவப்பும் கலந்த கலவையாக உள்ளன. இதன் விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இது ஒரு மூலிகைத்தாவரம் ஆகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்