ஆப்பிரிக்க கானாங்கோழி (ஆங்கிலம்: African Crake) என்பது கானாங்கோழி குடும்பத்தில் ஒரு பறவை ஆகும். வறண்ட தெற்கு மற்றும் தென் மேற்கிலிருந்து தொலைவில் உள்ள துணை சகாரா ஆபிரிக்காவில் காணப்படுகிறது. இது பருவகாலங்களில் பொதுவாக மழைக்காடுகளை தவிர்த்து குறைந்த மழைவீச்சு கொண்ட பகுதிகளில் வசிக்கின்றன. இந்த கானாங்கோழியானது பூமத்திய ரேகை விட்டு நகர்ந்து விரைவில் மழை பொழிகின்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்ய போதுமான புல் வளம் வழங்கும் பகுதிக்கு புலம் பெயருகின்றது. அட்லாண்டிக் தீவுகள் அடையும் திரிபவர் பறவைகளின் ஒரு சில பதிவுகள் உள்ளன. இந்த இனங்கள் பல்வேறு வகையான புற்தரை மற்றும் விவசாய நிலங்களில், சில சமயங்களில் உயரமான பயிர்களை பயன்படுத்தி கூடுகளை அமைத்து கொள்கின்றன.
ஆபிரிக்க கானாங்கோழி பறவையின் மேற்பரப்பானது பழுப்பு மற்றும் நீல நிற சாம்பல் பரம்பலை கொண்டது. பக்கவாட்டு பகுதியையும் வயிற்றின் மீது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டிருக்கும். இது ஒரு கட்டையான சிவப்பு அலகு, சிவந்த கண்கள், மற்றும் அலகிலிருந்து கண் வரை ஒரு வெள்ளை கோட்டை கொண்டிருக்கும். இது அதன் நெருங்கிய உறவுப் பறவையான கார்ன் கானாங்கோழி விட இது சிறியதாகும், இவ்வினங்கள் குறுகிய செட்டைகளையும் கண் பட்டையும் கொண்டிருக்கும். இது நாள் பொழுதில் சுறுசுறுப்பாக செயல்படும்.
ஆபிரிக்க கானாங்கோழி பறவையின் ஆண் இனம் அச்சுறுத்தும் தோற்றத்தை கொண்டிருப்பதோடு தன் ஆதிக்க எல்லைக்காகப் போராடும். இதன் கூடு ஒரு புல் மேடு அல்லது சிறிய புதரின் கீழ் மேலோட்டமாக புல் இலைகளை கொண்டு கட்டப்பட்டதாகும். இதன் முட்டை இளஞ்சிவப்பு நிறத்தில் 3 முதல் 11 முட்டைகள் வரை இடும் சுமார் 14 நாட்கள் அடைகாக்கும்.[2] மற்றும் வளரும் குஞ்சுகளுக்கு நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு பிறகு சிறகுகள் முளைக்க தொடங்கும். ஆபிரிக்க கானாங்கோழி ஒரு பரவலான உணவாக முதுகெலும்பில்லாத சில சிறிய தவளைகள் மீன்களையும், மற்றும் தாவர வகைகள் குறிப்பாக புல் விதைகளையும் உட்கொள்ளும். மேலும் இது பெரிய இரை தேடும் பறவைகள், பாம்புகள், அல்லது மனிதர்கள் உட்பட பாலூட்டிகள் மூலம் உணவாக உட்கொள்ளப்படுகிறது. மேலும் இவை எரியும் புல்வேளிகளால் அல்லது விவசாய நிலம், ஈர நில வடிகால் அல்லது நகரமயமாக்கலின் காரணமாக நிரந்தரமாக இடம் பெயர்ந்திருந்தாலும் இவை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகக் கருதப்படுகிறது.