பொய்க்கால் உள்ளான் (Stilt) என்பது நீர்வாழ் பறவைகளில் ஒன்றான உள்ளான் என்ற பறவையின் பொதுப்பெயரில் குறிக்கப்படுபவையாகும். இதன் குடும்பப்பெயர் ரெகொர்விசொடியிசு (Recurvirostridae) என்பதாகும். இவற்றுள் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை பொதுவாக நீர்நிலைகளின் ஓரங்களில் அதிக அளவு காணப்படுகின்றன. இவை நீரில் காணப்படும் சிறிய பூச்சி, மற்றும் சிறிய வண்டுகள் போன்றவற்றைப் பிடித்து உட்கொள்ளுகொன்றன. இதன் கால்கள் நீளமாகவும், அலகுப்பகுதி நீண்டு வளைந்தும் காணப்படுகின்றன.
இவற்றுள் 2 பேரினத்தில், 6 சிறிய இனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் நெடுங்கால் உள்ளான் மற்றும் ஹவாய் உள்ளான் போன்றவை எப்போதாவது இதன் கிளை இனங்களாகவே கருதப்படுகிறது. [1]
இவை ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டம் கொல்லேறு ஏரிப் பகுதிகளில் காணப்படுகின்றன. [2]
பொய்க்கால் உள்ளான் (Stilt) என்பது நீர்வாழ் பறவைகளில் ஒன்றான உள்ளான் என்ற பறவையின் பொதுப்பெயரில் குறிக்கப்படுபவையாகும். இதன் குடும்பப்பெயர் ரெகொர்விசொடியிசு (Recurvirostridae) என்பதாகும். இவற்றுள் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை பொதுவாக நீர்நிலைகளின் ஓரங்களில் அதிக அளவு காணப்படுகின்றன. இவை நீரில் காணப்படும் சிறிய பூச்சி, மற்றும் சிறிய வண்டுகள் போன்றவற்றைப் பிடித்து உட்கொள்ளுகொன்றன. இதன் கால்கள் நீளமாகவும், அலகுப்பகுதி நீண்டு வளைந்தும் காணப்படுகின்றன.
இவற்றுள் 2 பேரினத்தில், 6 சிறிய இனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் நெடுங்கால் உள்ளான் மற்றும் ஹவாய் உள்ளான் போன்றவை எப்போதாவது இதன் கிளை இனங்களாகவே கருதப்படுகிறது.
இவை ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டம் கொல்லேறு ஏரிப் பகுதிகளில் காணப்படுகின்றன.