பளிங்குப் பூனை (marbled cat) என்பது ஒரு காட்டுப்பூனை ஆகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் காணப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு இப்பூனை அழிவாய்ப்பு இனம் என்று பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. இதன் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. 10000 பூனைகள்வரை இருந்த இவற்றின் எண்ணிக்கை 1000வரை குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[2] இவை இந்தியாவில் சிக்கிம், டார்ஜிலிங், நாகாலாந்து போன்ற வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகிறது. மரபணு ஆய்வுகளில் இது ஆசிய தங்க நிறப் பூனை மற்றும் பே பூனை போன்ற பூனையினங்களில் இருந்து கிட்டத்தட்ட 9.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனி இனமாகி இருக்கலாம் கருதப்படுகிறது.[3]
பளிங்குப் பூனை சாதாரண பூனையின் அளவை ஒத்து உள்ளது. உடல் நிறத்திலும், குறிகளிலும் புள்ளிச் சிறுத்தையை ஒத்து உள்ளது. பழுப்பு கலந்த சாம்பல் அல்லது காவி நிறமுடைய தோலும், அதன் மீது நீட்டுப் போக்காக அமைந்த ஒழுங்கற்ற திட்டுக்களும் காணப்படுகின்றன.இதற்கு நீண்ட அடர்த்தியான வால் உள்ளது. இவை தலை முதல் உடல்வரை 45 – 62 செமீ (18 – 24 அங்குளம்) உடல் நீளம் கொண்டவை. வால் 35- இல் இருந்து 55-செமீ நீளமுடையது. எடை 2 இல் இருந்து 5 கிலோ இருக்கும். இது பறவைகளையும், சிறியவகைப் பாலூட்டிகளையும் உண்கிறது.
பளிங்குப் பூனை (marbled cat) என்பது ஒரு காட்டுப்பூனை ஆகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் காணப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு இப்பூனை அழிவாய்ப்பு இனம் என்று பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. இதன் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. 10000 பூனைகள்வரை இருந்த இவற்றின் எண்ணிக்கை 1000வரை குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவை இந்தியாவில் சிக்கிம், டார்ஜிலிங், நாகாலாந்து போன்ற வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகிறது. மரபணு ஆய்வுகளில் இது ஆசிய தங்க நிறப் பூனை மற்றும் பே பூனை போன்ற பூனையினங்களில் இருந்து கிட்டத்தட்ட 9.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனி இனமாகி இருக்கலாம் கருதப்படுகிறது.