dcsimg
Image of Abelmoschus crinitus Wall.
Creatures » » Plants » » Dicotyledons » » Mallows »

Abelmoschus crinitus Wall.

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ் ( Tamil )

provided by wikipedia emerging languages

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ் மால்வேசி குடும்பத்தின் ஒரு பூக்கும் தாவர இனமாகும். இத்தாவரம் 1830 இல் நதானியேல் வால்லிக் ஆல் விவரிக்கப்பட்டது.

வாழ்விடம்

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ் தாவரம் சீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஜாவா ஆகிய நாடுகளுக்கு அதிகமாக காணப்படுகின்றது. பாகிஸ்தானில் அாிதாக வளர்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது இலையுதிர் காடுகளிலும், புல்வெளி சரிவுகளில் 300-1300 மீட்டருக்கும் இடையிலும் காணப்படுகிறது.

பண்புகள்

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ் ஒரு பல்லாண்டுவாழ் புதர்செடி ஆகும். இது 1 மீ உயரம் வரை வளரும். இதன் இலைகள் 3-5 ஆழமற்ற மடல்கள் "முட்டை-கூம்பு" வடிவமாகவும் 8x7 செமீ அதிகபட்ச அளவைக்கொண்டு காணப்படும். மேல் மற்றும் கீழ் இலைப் பரப்புகளில் ஸ்டெல்லேட் துவிகள் உள்ளது, ஆனால் அது மேல் பரப்பில் மிகவும் அடர்த்தியாக உள்ளது. பூக்கள் "வெளிறிய வெள்ளையிலிருந்து ஆரஞ்சு-மஞ்சள் " நிறத்தில் காணப்படும். எப்போதாவது சிவப்பு மையமாகவும் காணப்படும். அவை 5-7 இலையடி செதில்கள் 7-11 மிமீ அளவைக் கொண்டிருக்கும். இவை பச்சை நிறத்தில் இருக்கும் போது மலாிலும் ,பழுப்பு நிறத்தில் இருக்கும் போது பழத்திலும் காணப்படும் [1]

குறிப்புகள்

  1. 1.0 1.1 "The Plant List: A Working List of All Plant Species". பார்த்த நாள் 7 January 2016.
  • Wall. 1830. Plantae Asiaticae Rariores 1: 39, t. 44.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ் மால்வேசி குடும்பத்தின் ஒரு பூக்கும் தாவர இனமாகும். இத்தாவரம் 1830 இல் நதானியேல் வால்லிக் ஆல் விவரிக்கப்பட்டது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்