dcsimg

பழுப்பு வசிகரன் ( Tamil )

provided by wikipedia emerging languages

பழுப்பு வசீகரன் (lemon pansy - Junonia lemonias) என்பவை தெற்காசியாவில் காணப்படும் வரியன்கள், சிறகன்கள், வசிகரன்கள் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். இது தோட்டங்களில், தரிசு நிலம், மற்றும் திறந்த வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. பழுப்பு நிற இறகுகளின் ஓரத்தில் அடர் பழுப்பு நிறக் கோடும், இறகுகளின் மேற்புறம் கண்கள் போன்ற மஞ்சள் புள்ளியும், மத்தியில் ஆரஞ்சு நிற வளையமும் காணப்படும். தரையை ஒட்டி சுறுசுறுப்பாக பறந்து திரியும். அனைத்து வாழிடங்களிலும் ஆண்டு முழுவதும் காணலாம்[1]. இவை ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும், மழைக் காலத்திலும் மழைக்குப் பின்னும் அதிகமாகத் தென்படுகின்றன. மழைக் காலத்தில் இதன் நிறம் பளிச்சென்றும், கோடைக் காலத்தில் நிறம் மங்கியும் காணப்படும். அப்போது காய்ந்த இலைகளைப் போன்ற உருமறைப்புத் தோற்றத்தைப் பெறுவதற்கு இந்த தகவமைப்பு உதவுகிறது.[2]

மேற்கோள்

  1. காடு இதழ், தடாகம் வெளியீடு 2016 மே-ஜுன் பக்: 40
  2. ஆதி வள்ளியப்பன் (2017 க்டோபர் 7). "வண்ணத்துப்பூச்சிக்கு சிமெண்ட் தரை பிடிக்குமா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 7 அக்டோபர் 2017.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பழுப்பு வசிகரன்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பழுப்பு வசீகரன் (lemon pansy - Junonia lemonias) என்பவை தெற்காசியாவில் காணப்படும் வரியன்கள், சிறகன்கள், வசிகரன்கள் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். இது தோட்டங்களில், தரிசு நிலம், மற்றும் திறந்த வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. பழுப்பு நிற இறகுகளின் ஓரத்தில் அடர் பழுப்பு நிறக் கோடும், இறகுகளின் மேற்புறம் கண்கள் போன்ற மஞ்சள் புள்ளியும், மத்தியில் ஆரஞ்சு நிற வளையமும் காணப்படும். தரையை ஒட்டி சுறுசுறுப்பாக பறந்து திரியும். அனைத்து வாழிடங்களிலும் ஆண்டு முழுவதும் காணலாம். இவை ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும், மழைக் காலத்திலும் மழைக்குப் பின்னும் அதிகமாகத் தென்படுகின்றன. மழைக் காலத்தில் இதன் நிறம் பளிச்சென்றும், கோடைக் காலத்தில் நிறம் மங்கியும் காணப்படும். அப்போது காய்ந்த இலைகளைப் போன்ற உருமறைப்புத் தோற்றத்தைப் பெறுவதற்கு இந்த தகவமைப்பு உதவுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்