தேன் தட்டான் (Brachythemis contaminata,[2] ditch jewel,) என்பது தட்டாரப்பூச்சியில் ஒரு இனமாகும். இது லிபரல்லூடேயில் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆசியக் கண்டத்தின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றது.[3]
இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.[4][5][6][7]
இந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.[8]
தேன் தட்டான் (Brachythemis contaminata, ditch jewel,) என்பது தட்டாரப்பூச்சியில் ஒரு இனமாகும். இது லிபரல்லூடேயில் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆசியக் கண்டத்தின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றது.
இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.