ஐஸோநேந்த்ரா லான்சியொலாட்டா (Isonandra lanceolata) என்பது சாபோடேசியே தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இது புதர்ச்செடி வகை அல்லது சிறு மரமாக 26 மீட்டர் (90 அடி) உயரம் வரை வளரக்கூடியது.[1][2][3] இதன் நடுமரப்பகுதி 46 செ.மீ (18 இன்ச்) விட்டம் கொண்டது. தண்டுப்பகுதி சாக்லேட் பழுப்பு நிறம் கொண்டது. இதன் பூங்கொத்தில் 10 எண்ணிக்கையிலான இளம் மஞ்கள் நிறப்பூக்களைக் கொண்டிருக்கும். லான்சியோலாட்டா என்பது லத்தீன் மொழிச் சொல்லாகும். இதற்கு கோள வடிவம் என்று பொருள். இது இலைகளின் வடிவைக் குறிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் (6600 அடி) உயரத்திலுள்ள காடுகளில் வளரக்கூடியது. இத்தாவர இனம் தென் இந்தியா, இலங்கை மற்றும் போர்னியோ ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.[4]
ஐஸோநேந்த்ரா லான்சியொலாட்டா (Isonandra lanceolata) என்பது சாபோடேசியே தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இது புதர்ச்செடி வகை அல்லது சிறு மரமாக 26 மீட்டர் (90 அடி) உயரம் வரை வளரக்கூடியது. இதன் நடுமரப்பகுதி 46 செ.மீ (18 இன்ச்) விட்டம் கொண்டது. தண்டுப்பகுதி சாக்லேட் பழுப்பு நிறம் கொண்டது. இதன் பூங்கொத்தில் 10 எண்ணிக்கையிலான இளம் மஞ்கள் நிறப்பூக்களைக் கொண்டிருக்கும். லான்சியோலாட்டா என்பது லத்தீன் மொழிச் சொல்லாகும். இதற்கு கோள வடிவம் என்று பொருள். இது இலைகளின் வடிவைக் குறிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் (6600 அடி) உயரத்திலுள்ள காடுகளில் வளரக்கூடியது. இத்தாவர இனம் தென் இந்தியா, இலங்கை மற்றும் போர்னியோ ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.