dcsimg
Imagem de Pantala Hagen 1861
Life » » Reino Animal » » Artrópode » » Hexapoda » Insetos » Pterygota » Libélulas » Libélula » » Libellulidae »

Pantala flavescens (Fabricius 1798)

தேசாந்திரித் தட்டான் ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

தேசாந்திரித் தட்டான் (Pantala flavescens) என்பது ஒரு வகை தட்டாம்பூச்சி ஆகும். தட்டான் பூச்சிகளில் Libellulidae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தத, இது 1798 ஆம் ஆண்டு பேப்ரிசியஸ் என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[1] இது மிகவும் பரவலாகக் காணப்படும் தட்டாம்பூச்சி ஆகும்.[2] தேசாந்திரித் தட்டான்கள் வலசை போகும் பண்பு கொண்டவை. பூச்சியினங்களிலேயே நீண்ட தொலைவுக்கு வலசைபோவது இந்தத் தட்டான்கள்தான் என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காற்று அலைகளின் உதவிகொண்டு, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு என்று இந்த வகைத் தட்டான்கள் வலசைச் சுழற்சியைப் பின்பற்றுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் சார்லஸ் ஆண்டர்சன் என்னும் கடலுயிர் ஆராய்ச்சியாளர். நான்கு தலைமுறைத் தட்டான்கள், மொத்தமாக 16 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றன என்கிறார் ஆண்டர்சன்.[3]

மேற்கோள்கள்

  1. Steinmann, Henrik (1997). World Catalogue of Odonata, Band II (Anisoptera). Berlin/New York: de Gruyter. பக். 542f. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-11-014934-6.
  2. William Tutt, James (1997). The Entomologist's Record and Journal of Variation (in German). London: Charles Phipps.. பக். 213.
  3. "பார்வையால் பிடித்து மகிழ்வோம் தட்டான்களை!". தி இந்து (தமிழ்) (2016 சூன் 4). பார்த்த நாள் 4 சூன் 2016.
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

தேசாந்திரித் தட்டான்: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

தேசாந்திரித் தட்டான் (Pantala flavescens) என்பது ஒரு வகை தட்டாம்பூச்சி ஆகும். தட்டான் பூச்சிகளில் Libellulidae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தத, இது 1798 ஆம் ஆண்டு பேப்ரிசியஸ் என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இது மிகவும் பரவலாகக் காணப்படும் தட்டாம்பூச்சி ஆகும். தேசாந்திரித் தட்டான்கள் வலசை போகும் பண்பு கொண்டவை. பூச்சியினங்களிலேயே நீண்ட தொலைவுக்கு வலசைபோவது இந்தத் தட்டான்கள்தான் என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காற்று அலைகளின் உதவிகொண்டு, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு என்று இந்த வகைத் தட்டான்கள் வலசைச் சுழற்சியைப் பின்பற்றுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் சார்லஸ் ஆண்டர்சன் என்னும் கடலுயிர் ஆராய்ச்சியாளர். நான்கு தலைமுறைத் தட்டான்கள், மொத்தமாக 16 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றன என்கிறார் ஆண்டர்சன்.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages