பேய் மீன் (Devil Fish) அல்லது ராட்சத பேய் மீன் (மாபுலா மாபுலார்) என்ற மீனானது மைலோபாட்டிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மீனினமானது அழியக்கூடிய மீனின வரிசையில் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடிப்பதாலோ அல்லது வேறு காரணத்தாலோ அது அழியக்கூடிய நிலையில் இருக்கிறது.
பேய் மீனானது, தன் இனத்தை சார்ந்த மற்ற மீன்களை விட பெரிதாக இருக்கும். இது 5.2 மீட்டர் (17 அடி) நீளம் வரை வளரும் அதிகபட்சமாக வளரும். இது மிகப் அதிகமாக கதிர்வீசக் கூடிய மீனாகும். இம்மீனின் வாலில் முள் கொண்டது.[2]
மத்தியதரைக் கடல் பகுதியில் பேய் மீன் அதிகமாக உள்ளது. கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படுகிறது, தென்மேற்கு கடற்கரை பகுதி மற்றும் தெற்கு போர்த்துக்கல் பகுதியிலும் உள்ளது. மேலும், வடமேற்கு அட்லாண்டிக் பகுதியிலும் இருக்கலாம். அவைகள் பிரதானமாக ஆழ்கடலிலேயே வாழ விரும்புகின்றன.[2] பேய் மீன் கடலோர பகுதி முதல் நெரிடிக் மண்டலம் வரை வசித்து வருவதால், அவற்றின் வீச்சு பல ஆயிரம் மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது. இம்மீன்கள் பொதுவாக சிறிய கூட்டமாக காணப்படுகின்றன, மேலும், அவ்வப்போது அவை பெரிய குழுக்களையும் உருவாக்குகின்றன.[1]
இம்மீன்கள், வெளி ஓட்டுடைய (crustaceans) விலங்கின் குஞ்சுகளையும், சிறிய மீன்களையும் உணவாகக் கொள்கின்றன. இவை தன் உணவினை மாற்றியமைக்கப்பட்ட செவுள்கள் மூலம் நிழல் போல் பின் தொடர்ந்து பிடித்து இழுத்து உணவினை உண்கிறது. இது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சேர்ந்தது. முட்டையிலிருந்து வரக் கூடிய குஞ்சுகள் தாயின் உடலிலிருந்து வெளிவருகிறது. வெளியே வந்த பின்பு முழுவுயிராக வளர்ச்சியடைகிறது. தாயின் உடலில் இருந்து வரக்கூடிய ஒரு மீன் குஞ்சு என்றழைக்கப்படுகிறது.[1]
இம்மீன்கள், ஒரு வரையறுக்கப்பட்ட வரம்புக்குள்ளும் மற்றும் குறைந்த விகிதமே இனப்பெருக்கமே செய்யக் கூடியது. இதன் விளைவாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த மீன் இனங்களுக்கு வரும் முக்கிய அச்சுறுத்தல்களானது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து ஏற்படும் மாசுசீர்கேட்டினால் வருகிறது. அதே போன்று மீன் பிடிப்பதில் பல்வேறு வகையான கருவிகளை உள்ளடக்கிய மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன, இழுவலை, சூரை மீன் கொண்டு பொறி வைத்து பிடித்தல், வலை போட்டு பிடித்தல் போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இதனால் இம்மீன் இனங்கள் அருகிவருகின்றன.[1]
பேய் மீன் (Devil Fish) அல்லது ராட்சத பேய் மீன் (மாபுலா மாபுலார்) என்ற மீனானது மைலோபாட்டிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மீனினமானது அழியக்கூடிய மீனின வரிசையில் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடிப்பதாலோ அல்லது வேறு காரணத்தாலோ அது அழியக்கூடிய நிலையில் இருக்கிறது.