நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri pipit (Anthus nilghiriensis)) என்பது ஒரு தனித்துவமான பறவை இனமாகும். இப்பறவை தென்னிந்தியாவின் உயர்ந்த மலைப்பகுதிகளில் காணப்படும் அகணிய உயிரி பறவையாகும். இந்தப் பகுதியில் உள்ள மற்ற நெட்டைக்காலிகளைவிட இதன் நிறம் மிகுதியான பழுப்பு நிறத்தில் உள்ளது. நீலகிரி நெட்டைக்காலி 12.6-14 சென்டிமீட்டர் (5.0-5.5 இன்ச்) நீளமுடையது.
நீலகிரி நெட்டைக்காலிகள் மலைசார் புல்தரைகள், சதுப்பு நிலப்பகுதிகள் போன்றவற்றை ஒட்டிய பகுதிகளில், பெரும்பாலும் 1,000 மீட்டர் (3,300 அடி) உயரத்தில் பொன்முடி மலைகளிலும்,நீலகிரி, பழனி மலைப்பகுதிகளில் 1,500 மீட்டர் (4,900 அடி) உயரப் பகுதிகளில் உள்ள மலை சரிவுகளில் சிறு நீரோடைகள் உள்ள இடங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.[2] பொதுவாக இந்த பறவை அழிந்து விட்டது என்று சொல்லப்படுகிறது.[3]
நீலகிரி நெட்டைக்காலிகள் தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படுகின்றன. அவை பொதுவாக தொந்தரவுக்கு ஆளாகும்போது குட்டைப் புதர், மரத்திற்குள் பறந்து சென்று மறைந்து கொள்கின்றன. இவை ஏப்ரல் முதல் ஜூலை வரை கோடைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. குட்டைப் புற்களில் புற்களைக் கொண்டு கூடுகட்டி, இரண்டு மூன்று சாம்பல் பழுப்பு நிறமுடைய முட்டைகள் இடுகின்றன. இவை இனப்பெருக்கக் காலத்தில் முதுகெலும்பில்லாத பூச்சிகளையும், புல் விதைகளையும் உணவுவாகக் கொள்கின்றன .